search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளைகாப்பு நிகழ்ச்சி"

    கொருக்குப்பேட்டையில் போலீஸ் நிலையத்தில் சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலேயே நடத்தப்பட்டது.
    ராயபுரம்:

    சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி என்ற பெண் போலீஸ் 2½ ஆண்டாக பணியாற்றி வருகிறார்.

    இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. 2008-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பணியாற்றிய இவர் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கருத்தரித்த மகாலட்சுமி. வளைகாப்பு நிகழ்ச்சி தனக்கு நடத் தப்படுமா? என்ற கவலையில் இருந்துள்ளார். உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லாததால் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைக்க விரும்பவில்லை.

    குழந்தை பிரசவத்துக்கு தாய் வீட்டிற்கு செல்லும் முன் நடத்தப்படும் வளைகாப்பு நடைபெறுமா என்ற மன உளச்சலில் சக பெண் போலீசாரிடம் கூறி வருத்தம் அடைந்தார்.

    இதுபற்றி பெண் போலீசார் சக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மகாலட்சுமிக்கு எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பிரசவத்துக்கு செல்லும் முன் வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலேயே நடத்த தடபுடலான ஏற்பாடு செய்யப்பட்டது.

    குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி, சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் மோகன் ஆகியோர் தலைமையில் சீமந்த விழாவை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமியையும் அவரது கணவரையும் அமர வைத்து மாலை அணிவித்து சம்பிரதாய முறைகளை செய்தனர்.

    பூ, குங்குமம் வைத்து வளையல்கள் கைகளில் பூட்டப்பட்டு மகாலட்சுமியை மணப்பெண் போல ஜோடித்தனர். பெண் காவலர்கள் மட்டுமின்றி ஆண் காவலர்களும் நிலையத்தில் பணிபுரிந்த சக ஊழியர்கள் அனைவரும் சீர்வரிசை தட்டுகளுடன் 5 வகை சாதம் கலந்து நலங்கு வைத்து விமரிசையாக கொண்டாடினர்.

    போலீசாரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறினர். பெண் காவலர் மகாலட்சுமியுடன் ஒவ்வொருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    பொதுவாக போலீஸ் நிலையத்தில் காதல் திருமணங்களும், காதல் ஜோடியை இணைத்து வைக்கும் சம்பவங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஒன்று சேர்ந்து வித்தியாசமாக தன்னுடன் பணிபுரியும் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்துவதை காட்டிலும் சிறப்பாக அமைந்திருந்தது.
    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகிற வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பெண்கள் ஆர்வமுடன் வளையல்களை வாங்கினர். வளைகாப்பு வைபத்துக்காக சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.

    மதியம் 12.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.

    விழாவில் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்கிழமை) 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் ஊழியர்கள், பத்கர்கள் செய்து உள்ளனர். 
    ×